கொரோனா மரணம்: வைத்தியசாலையின் செயலால் அச்சத்தில் உள்ள கிராமம்

#Corona Virus
Mayoorikka
4 years ago
கொரோனா மரணம்: வைத்தியசாலையின் செயலால் அச்சத்தில் உள்ள கிராமம்

மொனராகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில்  77 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பின்னர், இறந்த பெண்ணின் உடல் வைத்தியசாலையில் இருந்து உறவினர்களிடம் அடக்கம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, சடலம்  புத்தல, ஒக்கம்பிட்டிய   மினிபுரகம  பகுதியில் உள்ள குறித்த பெண்ணின்   வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சில மணி நேரம் கழித்து, வைத்தியசாலை அதிகாரிகள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து குறித்த மரணம் கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர், சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை தனிமைப்படுத்தல் விதிகளின்படி அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

சுகாதார தரப்பினர் சடலத்தை எடுத்துச் செல்லும் வரையில் சுமார் 200 க்கும் அதிகமானவர்கள் சடலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் உள்ளவர்களை தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4