அதி உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து தப்பியோடிய கைதி

#Prison
Prathees
4 years ago
அதி உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து தப்பியோடிய கைதி

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர் இன்று (15) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர். 

ஹெய்யன்துடுவ மஹகும்புரவத்தை பிரதேசத்தைச்சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்தநபர், 20 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த தவறி நிலையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த கைதி சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4