சீனாவுக்கு ஒரு சதம் கூட வழங்கக்கூடாது – மைத்திரி திடீர் அறிவிப்பு

#Maithripala Sirisena #China
Prasu
4 years ago
சீனாவுக்கு ஒரு சதம் கூட வழங்கக்கூடாது – மைத்திரி திடீர் அறிவிப்பு

சீன உர நிறுவனத்திற்கு ஒரு சதம் கூட வழங்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனத்திடமிருந்து உரம் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக அது குறித்து யாரெனும் ஒரு அமைச்சரோ அல்லது உயர் அதிகாரிகளோ நிச்சயமாக செயற்பட்டிருப்பார்கள்.

அவ்வாறான நபர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்தே இந்த பணத்தை அறவிட வேண்டுமென சுட்டிக்காட்டினார்.

நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துவரும் நிலையில் இவ்வாறானதொரு தொகையை செலுத்துவதற்கு ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4