விடுமுறையை கழிக்க நாட்டை விட்டு வெளியேறும் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

#Parliament
Prathees
4 years ago
 விடுமுறையை கழிக்க நாட்டை விட்டு வெளியேறும் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வருட இறுதி விடுமுறைக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றனர்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இருப்பதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வரும் இவர்களது குழந்தைகள்இ இந்த விடுமுறை காலத்தில் வெளிநாடு சென்று உறவினர்களை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் அடங்கிய மற்றுமொரு குழு நுவரெலியாவில் வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்காக பங்களாக்களை முன்பதிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அமைச்சர்களுக்கு ஜனவரி 18ஆம் திகதி வரை நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4