இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கின் முக்கிய அறிவித்தல்

Prabha Praneetha
4 years ago
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கின் முக்கிய அறிவித்தல்

சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் சமாசத்தில் மீனவர்களுக்கு வலைகள் மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்றைய தினம்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவிவருகின்றது.அதன் ஒரு அங்கமாகவே சீன தூதரகமானது யாழ்ப்பாண மக்களுக்கு மீன்பிடி வலை மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கிறது.

இந்த உதவி வழங்கும் நிகழ்வை ஒரு ஆரம்ப நிகழ்வாகவே நாங்கள் கருதுகின்றோம். இன்று ஆரம்பமான இந்நிகழ்வானது சீனா மற்றும் வடக்கு மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் என நாங்கள் கருதுகின்றோம்.

குறிப்பாக சீன தூதரகமானது இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது சீனா நாடான இலங்கைக்கு பெருமளவில் உதவிகளை வழங்கியுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4