பேய் பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்த பாடசாலை மாணவி மாயம்

#Suicide
Prathees
4 years ago
பேய் பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்த பாடசாலை மாணவி மாயம்

பேராதனை கறுப்பு பாலத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவர் மகாவலி ஆற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன மாணவி கண்டி பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மாணவி காதல் தொடர்பு வைத்திருந்த 20 வயது இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில்  குறித்த மாணவி கடந்த 9ஆம் திகதி ஆற்றில் குதித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அன்றைய தினம் மதியம் 2.30 மணியளவில் மாணவி விளையாட்டு பயிற்சிக்காக பாடசாலைக்கு  சென்றுள்ளார்.

அதே நேரத்தில் பாடசாலையை விட்டு வெளியேறுவது அங்கிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

அந்த நேரத்தில்  பேராதனைப் பல்கலைக்கழகத்தை அண்டிய கறுப்புப் பாலத்திற்கு அருகில் குறித்த மாணவி தன்னைச் சந்திக்க வந்ததாக காதலன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தற்கொலைகள் அதிக அளவில் நடப்பதால், உள்ளூர் மக்கள் இந்தப் பாலத்தை 'பேய் பாலம்' என்ற மற்றொரு பெயரால் அழைக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில், மாணவி தனது தொலைபேசியை சோதித்ததாகவும், அவர் வேறு ஒரு பெண்ணுக்கு அனுப்பிய பல குறுஞ்செய்திகளைப் பார்த்து ஆற்றில் குதித்ததாகவும்  காதலன் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை யாரிடமும் கூறாமல் வீட்டுக்குச் சென்றதாக சந்தேக நபரின் காதலன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலின்படி, பொலிஸ் உயிர்காப்புக் குழுவொன்று கறுப்புப் பாலத்திற்கு அருகில் மகாவலி ஆற்றில் இறங்கிய போதிலும் மாணவியைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4