காதலுக்கு மறுப்பு தெரிவித்த மைத்துனியை துப்பாக்கியால் சுட்ட இளைஞன்

#Death
Prathees
4 years ago
காதலுக்கு மறுப்பு தெரிவித்த மைத்துனியை துப்பாக்கியால் சுட்ட இளைஞன்

காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் இளைஞன் ஒருவன்  தனது மைத்துனியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

நெடுங்கேணி சேனாபிலவு பகுதியில் கடந்த 15ஆம் திகதி காலை இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று காலை 11.45 மணியளவில் யுவதி தனது மோட்டார் சைக்கிளில் நெடுங்கேணி ஈட்டமுறிஞ்சான் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது குறித்த இளைஞன் காட்டில் மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்  ஈட்டமுறிஞ்சான் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான மைத்துனர் அவளுடன் காதல் உறவைப் பேண கொஞ்ச நாளாக கடுமையாக முயற்சி செய்து வந்துள்ளதாக தெதரிவக்கப்படுகிறது.ஆனால்இ அதற்கு அவர் சம்மதிக்காததால் கோபத்தில் கொலையை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்துவிட்டு தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சந்தேகநபர் முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4