பதில் நிதி அமைச்சருடன் இந்தியத் தூதுவர் கலந்துரையாடல்!

Prasu
4 years ago
பதில் நிதி அமைச்சருடன் இந்தியத் தூதுவர் கலந்துரையாடல்!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே இன்று பதில் நிதி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை சந்தித்துள்ளார்.

கொழும்பிலுள்ள வெளியுறவு அமைச்சகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு தொடர்பிலும், வர்த்தக நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான பல விடயங்கள் மற்றும் அண்மையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் பெறுபேறுகள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4