நாட்டை மேம்படுத்தும் சவாலை ஏற்க தயார்- அநுர

Prabha Praneetha
4 years ago
நாட்டை மேம்படுத்தும் சவாலை ஏற்க தயார்- அநுர

நாட்டை மேம்படுத்தும் சவாலை ஏற்க தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுமக்கள், தங்கள் குறைகளுக்கு புதிய வழியையும் தீர்வுகளையும் தேட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டின் இளைஞர்கள், தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் அனைத்து சமூகத்தினருக்கும் நம்பிக்கையை ஊட்டுவதில் கட்சி கவனம் செலுத்தும் என்றும், இதற்காக குடிமக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அநுர குமார திஸாநாயக்க  வலியுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4