திரவ உரத்தை தெளிக்கும் போது மயக்கமடைந்த விவசாயி

#Polonnaruwa
Prathees
4 years ago
திரவ உரத்தை தெளிக்கும் போது மயக்கமடைந்த விவசாயி

நெல் வயலுக்கு அரசு வழங்கியதாக கூறப்படும் திரவ உரத்தை தெளித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக விவசாயி ஒருவர் ஆபத்தான நிலையில் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பொலன்னறுவை அரலகங்வில கந்தேகம பகுதியை சேர்ந்த விவசாயியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இலக்கம் 338 கந்தேகம தம்மின்ன பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான  சிறிவர்தன (47) என்ற விவசாயிக்கே  கரிம திரவ உரம் தெளித்து ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (14ம் திகதி) காலை தனது வயலில் இந்த திரவ உரத்தை  தெளித்துள்ளார்.
இதனால் வாந்தி, மயக்கம் அடைந்த அவர் வீடு திரும்பாமல்  வயலில் இருந்துள்ளார். 

இன்று பிற்பகல் குறித்த விவசாயியை பிள்ளைகள் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் 
மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த திரவ உரத்தை தெளித்ததன் மூலம் தமக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கணவர் கூறியதாக மனைவி அனோஜா குமாரி தெரிவித்தார்.

கந்தேகம விவசாயிகள் சங்கத்தினூடாக கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இவ்வகை திரவ உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4