மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 வருட சிறைத்தண்டனை 

#Sexual Abuse #Court Order
Prathees
4 years ago
மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 வருட சிறைத்தண்டனை 

தாய் இல்லாத  வயது குறைந்த மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த  தந்தைக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் 75,000 ரூபா தண்டப்பணமும், 1 மில்லியன் ரூபா நட்டஈடும் செலுத்துமாறு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று மாலை உத்தரவிட்டுள்ளது.

6 வருடங்களுக்கு முன் இவரது வயது குறைந்த  மகளை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக  ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மூன்று வெவ்வேறு குற்றச்சாட்டுகளில் தண்டனை விதித்தது.

குற்றவாளிக்கு கடின உழைப்புடன் 60 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 75,000ருபா  அபராதம் செலுத்தவேண்டும் எனவும், 

மேலும் பாதிக்கப்பட்ட  மகளுக்கு ரூ.1 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல  உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கதிர்காமம்இ கோதமிகம பகுதியைச் சேர்ந்த  42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான விராஜ் ஹேமந்த என்பவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4