7.6 கோடி ரூபாய் லாட்டரியில் ஜாக்பாட் வென்ற அதிர்ஷ்டசாலி

Prasu
4 years ago
7.6 கோடி ரூபாய் லாட்டரியில் ஜாக்பாட் வென்ற அதிர்ஷ்டசாலி

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தை சேர்ந்தவர் ஆல்வின் கோப்லேண்ட். இவரை மிகவும் அதிர்ஷ்டக்கார மனிதர் என சொல்லலாம். கடந்த 2002 வாக்கில் இவர் வாங்கி இருந்த லாட்டரிக்கு அப்போது 76 லட்ச ரூபாய் (1 லட்சம் அமெரிக்க டாலர்கள்) ஜாக்பாட் அடித்துள்ளது. இந்த நிலையில் அவர் அண்மையில் வாங்கிய லாட்டரி சீட் ஒன்றுக்கு 7.6 கோடி ரூபாய் (1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஜாக்பாட் அடித்துள்ளது.

“நான் இப்போது மகிழ்வாக உள்ளேன். எப்போதும்போல நான் லாட்டரி டிக்கெட் வாங்கும் போது என்ன எண்ணில் வாங்குவேனோ அதையேதான் இப்போதும் வாங்கி இருந்தேன். அதற்குதான் ஜாக்பாட் அடித்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோல அதே வர்ஜீனியா மாநிலத்தை சேர்ந்த மற்றொருவர் ஒரே குலுக்களுக்கான இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். அவர் வாங்கியிருந்த இரண்டு லாட்டரி சீட்டிலும் ஒரே எண் இருந்துள்ளது. அந்த குலுக்களில் வெற்றி பெறுபவருக்கு ஆண்டுக்கு 25000 அமெரிக்க டாலர்கள் பரிசு என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த லாட்டரி குலுக்கலில் அவர் வைத்திருந்த எண்ணுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதனால் தற்போது அவர் வாங்கிய இரண்டு லாட்டரி சீட்டுக்கும் தனித்தனியே பரிசு தொகை கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4