சிங்கப்பூர் பயணிகள் இத்தாலிக்குள் நுழைய தடை

Prasu
2 years ago
சிங்கப்பூர் பயணிகள் இத்தாலிக்குள் நுழைய தடை

சிங்கப்பூர் பயணிகள் இன்று முதல் இத்தாலிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள இத்தாலிய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் சுகாதார அமைச்சகம் சிங்கப்பூர் மற்றும் புருனேயை கோவிட் -19 தொற்று காரணமாக அதிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பட்டியலில் உள்ள நாடுகளை சேர்ந்த பயணிகள் வேலை, உடல்நலம் மற்றும் படிப்பு காரணங்களுக்காக மட்டுமே இத்தாலிக்கு பயணிக்கலாம். மேலும் அவசர வேலை இல்லாத சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்திற்குள் குறிப்பிட்ட பகுதிகளை விட்டு வெளியேறாமல் இத்தாலி விமான நிலையங்கள் வழியாக மற்ற இடங்களுக்கு செல்ல முடியும். இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முதல் வரும் வருடம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இத்தாலி அரசு சிங்கப்பூரை ஏன் அதிக பாதிப்பு உள்ள நாடு பட்டியலில் சேர்த்தது என்று எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இதன் மூலம் தற்போது இத்தாலியில் இருந்து தகுதியான பயணிகள் சுயமாக தனிமைபடுத்தாமல் சிங்கப்பூருக்கு உள்நுழைய VTL மூலம் பயன்படுத்த முடியும்.