விமானத்தில் கருப்புப் பெட்டிகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

Prasu
2 years ago
விமானத்தில்  கருப்புப் பெட்டிகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்து குறித்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்க்கு சொந்தமான போயிங் 737-800 விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இரு விமானிகள் உள்ளிட்ட 18 பேரை பலிகொண்ட இந்த விமான விபத்திற்கான காரணம் என்ன என்பதை இந்த கருப்புப் பெட்டியை கொண்டு ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டிகள் என்றால் என்ன?

ஆரஞ்சு நிறத்திலான இரண்டு மெட்டல் பெட்டிகளே கருப்பு பெட்டிகள் ஆகும். இதில் ரெக்கார்டர்கள் இருக்கும். 1950ம் ஆண்டு முதல் இந்த கருப்புப்பெட்டி முறை அமலில் உள்ளது. விமான விபத்து நிகழும்போது கடைசியாக நடைபெற்ற உரையாடல்கள் உள்ளிட்டவைகள் இந்த ரெக்கார்டரில் பதிவாகி இருக்கும். இந்த உரையாடலின் மூலம், விமான விபத்து நிகழ்வதற்கு முன் விமானிகள் என்ன பேசிக்கொண்டார்கள், விபத்திற்கான காரணம் உள்ளிட்டவைகளை அறிய முடியும். முன்னொரு காலத்தில், மெட்டல் பட்டைகளில் இந்த உரையாடல்கள் பதிவாயின, அடுத்து மேக்னடிக் டிரைவ்களிலும், தற்போது மெமரி சிப்களிலும் இந்த உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

விமான விபத்து விசாரணையில் கருப்புப் பெட்டி ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

ஒவ்வொரு விமானத்திலும் இரண்டு கருப்புப் பெட்டிகள் இருக்கும். ஒரு பெட்டியில் விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் (cockpit voice recorder (CVR)) மற்றொன்றில் பிளைட் டேட்டா ரெக்கார்டரும் (flight data recorder (FDR)) இருக்கும். விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளf light data recorder (FDR)ல் பதிவான தகவல்கள் உதவும். (cockpit voice recorder (CVR)ல் விமானிகளுக்கிடையேயான உரையாடல், இஞ்ஜின் சத்தம் உள்ளிட்டவைகள் பதிவாகி இருக்கும். FDRல் விமானத்தின் வேகம், விமானத்தின் தலைப்பகுதி, ஆட்டோபைலட் ஸ்டேட்டஸ், வெர்டிகல் ஆக்சிலரேசன், ஆல்டிடியூட் பிட்ச், ரோல் உள்ளிட்ட 80 விதமான தகவல்கள் பதிவாகி இருக்கும்.

கருப்புப் பெட்டிகள் ஏன் சேதம் அடைவதில்லை?

விமானத்தின் கருப்புப் பெட்டிகள் எவ்விதமான விபத்தின்போதும் பாதிப்படையாத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கருப்புப்பெட்டி, டைட்டானியம் உள்ளிட்ட உலோகங்களால் ஆனது. அதிக வெப்பம், குளிர் உள்ளிட்டவைகளை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விமான விபத்து நிகழ்ந்தால், மீட்பு பணிகளோடு, கருப்புப்பெட்டியை தேடும்பணியும் முடுக்கிவிடப்படும். கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகும் பட்சத்தில் கருப்புப் பெட்டியில் இருந்து 30 நாட்களுக்கு சிக்னல்கள் வரும். மலேசிய விமான விபத்தில், கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்படாததால், விபத்திற்கான காரணம் இன்னும் புலப்படவில்லை.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 10 முதல் 15 நாட்களுக்குள் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு விட்டால், விமான கட்டுப்பாட்டு மையம், விமானிகள் இடையயோன உரையாடலை கொண்டு விபத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து விடலாம். விமானம் தரையிறங்கும்போது அது எந்த வேகத்தில் இருந்தது. அப்போது வானிலை எவ்வாறு இருந்தது உள்ளிட்ட தகவல்களை கொண்டு விபத்திற்கான காரணங்களை நாம் அறிந்துகொள்ளலாம்.