சினோவேக் தடுப்பூசி அபாயம் - ஆய்வில் தகவல்

Prasu
2 years ago
சினோவேக் தடுப்பூசி அபாயம் - ஆய்வில் தகவல்

‘ஃபைசர் பையோ­என்­டெக்’, ‘மொடர்னா’ தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக் கொண்­ட­வர்­க­ளை­விட சீனா­வின் ‘சினோ­வேக்’ தடுப்­பூசியை இரு முறை போட்­டுக்­கொண்­ட­வர்­கள், கொவிட்-19 தொற்­றால் கடும் நோய்க்கு ஆளா­கும் சாத்­தி­யம் அதி­கம் என்று தேசிய தொற்று நோய்­க­ளுக்­கான நிலை­யம் (என்­சி­ஐடி) அதன் ஆய்­வில் கண்­ட­றிந்­துள்­ளது.

சினோ­வேக்-கொரோ­னா­வேக் தடுப்­பூ­சியை மூன்று முறை போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்­ப­தற்கு இதுவே தேவை­யான ஆதா­ரம் என்று என்­சி­ஐடி அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது. கடும் நோய் பாதிப்­புக்கு எதி­ராக ஃபைசர் தடுப்­பூசி 90% செயல்­தி­ற­னை­யும் மொடர்னா தடுப்­பூசி 97% செயல்­தி­ற­னை­யும் அளிக்­கின்­றன.

இருப்­பி­னும், கடும் நோய் பாதிப்­புக்கு எதி­ராக சினோ­வேக் தடுப்­பூ­சிக்கு 60% செயல்­தி­றன் மட்­டுமே உள்­ளது.

இவ்­வாண்டு அக்­டோ­பர் 1க்கும் நவம்­பர் 21க்கும் இடைப்­பட்ட காலத்­தில் 1.25 மில்­லி­யன் பேர் மீது நடத்­தப்­பட்ட ஆய்­வில் இது கண்­ட­றி­யப்­பட்­டது.