பிரதேச சபையை சுற்றி போராட்டம் நடத்திய மக்கள்

#Protest
Prathees
2 years ago
பிரதேச சபையை சுற்றி  போராட்டம் நடத்திய மக்கள்

அகரபத்தனை பிரதேச சபையினால் அகரபத்தனை மன்றாசி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பல கடைகளுக்கு எதிராக அகரபத்தனை பிரதேசவாசிகள் நேற்று லிதுல நாகசேனை பிரதேச சபை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகரபத்தனை மன்றாசி பிரதேசத்தில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பாலத்தின் அருகில் உள்ள நிலத்தில் பேருந்து நிறுத்தம் கட்டப்படும் என வாக்குறுதி  அளிக்கப்பட்டது.

எனினும் இதுவரை அந்த இடத்தில்,  அகரபத்தனை பிரதேச சபையின் தலைவரால் சபையின் அனுமதியின்றி பல கடைகளை நிர்மாணிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வந்தனர்.

நேற்று  அகரபத்தனை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தின் போது  பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அகரபத்தனை பிரதேச மக்கள், பிரதேசவாசிகளின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் தேவையான அபிவிருத்திப் பணிகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அகரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர் செல்வம்  இவ்வாறு தெரிவித்தார்.

பிரதேச சபைக்கான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல கடைகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.