ஸ்ரீ பாத யாத்திரையை முன்னிட்டு நகைகள்  ஏந்திய வாகன பேரணி ஆரம்பம்

Prathees
4 years ago
ஸ்ரீ பாத யாத்திரையை முன்னிட்டு நகைகள்  ஏந்திய வாகன பேரணி ஆரம்பம்

ஸ்ரீ பாத யாத்திரை காலத்தை முன்னிட்டு கல்பொத்தவல ஸ்ரீ பாத விஹாரையில் இருந்து சுமன சமன் தேவர் சிலை, நகைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஏந்திய வாகன பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை 5 மணியளவில் ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வாகன பேரணியானது பெல்மடுல்லயிலிருந்து இரத்தினபுரி புதிய நகரம் வரை பதுளை - இரத்தினபுரி வீதியில் பயணித்து மீண்டும் அதே வீதியில் இரத்தினபுரி மகா சமன் தேவாலயம் வரை பயணிக்கவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் குறித்த வீதியின் போக்குவரத்து தடைபடலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதி மற்றும் இரத்தினபுரியிலிருந்து பாணந்துறை வீதியின் மகா சமன் தேவாலயம் வரையிலான வீதியை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4