யாழ்ப்பாணத்தில் மலேரியா நோய் பரவும் அபாயம்!

#SriLanka #Jaffna
யாழ்ப்பாணத்தில் மலேரியா நோய் பரவும் அபாயம்!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு மல்லாகத்தை சேர்ந்த 27 வயது நபரொருவர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வேளையில் பரிசோதனையில் அவருக்கு மலேரியா இருப்பது கண்டறிப்பட்டுள்ளது

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரொருவரே தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரிய அறிகுறிகளுடன் நேற்றிரவு 8 மணியளவில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா மருத்துவமனையில் இருந்து யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு மருத்துவ அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவருக்கு மலேரியாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. தொற்றுக்குள்ளான நபர் யா.போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா முன்னெச்சரிக்கை மருத்துவ வழிகாட்டுதல்களை தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரிகளிடம் பெற்றுச் செல்லுமாறும் யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் அ. ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.