மரக்கறி விலைகளில் மாற்றம்!

#prices
Mayoorikka
4 years ago
மரக்கறி விலைகளில் மாற்றம்!


சில மரக்கறிகளின் விலைகளில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், இந்த நிலைமை காணப்படுகின்றது.

நாரஹேன்டிபிட்டி பொருளாதார மையத்தில் நேற்று, ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 800 ரூபாயாகவும், மொத்த விலை 750 ரூபாயாகவும் காணப்பட்டது. பச்சை மிளகாய் கிலோகிராம் 900 ரூபாய்க்கு விற்பனையானது.

ரத்மலானை பொருளாதார மையத்தில், ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 650 ரூபாயாகவும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1,000 ரூபாயாகவும் காணப்பட்டது.

தம்புள்ளை பொருளாதார மையத்தில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 550 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 800 ரூபாய்க்கும் விற்பனையானது.

அதேபோல் போஞ்சி ஒரு கிலோகிராமின் மொத்த விலை, 280 ரூபாயாக காணப்பட்டது. நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் போஞ்சி ஒரு கிலோகிராமின் மொத்த விலை 380 ரூபாயாவும், சில்லறை விலை 400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மாகாணங்களில் மரக்கறி விலைகளில் அதிக உயர்வு காணப்படுகின்றது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் ஒருகிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாயாகவும், ஒரு பிடி கீரை 130 மற்றும் ஒரு கிலோ கத்தரி 400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4