ஒமிக்ரோனுக்கு மருந்து தயார் - பைசர் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

#world_news
Nila
4 years ago
ஒமிக்ரோனுக்கு மருந்து தயார் - பைசர் நிறுவனத்தின்  அதிரடி அறிவிப்பு!

“எங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ‘பாக்ஸ்லோவிட்’ மாத்திரையை எடுத்துக் கொண்டால், ‘ஒமிக்ரோன்’ வகை கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து தப்பலாம்,” என, ‘பைசர்’ நிறுவன CEO., ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் பைசர் நிறுவனம் கொரோனா வைரசுக்காக, பாக்ஸ்லோவிட் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது.

கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மூன்று நாட்களில் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம் 89 சதவீதம் குறைந்து விடும்.

ஐந்து நாட்களுக்குள் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், அந்த ஆபத்து 88 சதவீதமாக குறைந்துவிடும் என, பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பரிசோதனைக்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 2,246 பேருக்கு, இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதில் 0.7 சதவீதம் பேர் மட்டுமே 28 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இந்த மாத்திரை நல்ல செயல்திறனுடன் இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

பாக்ஸ்லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஒமிக்ரோன் உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4