கொரோனா தடுப்பூசி ஏற்க மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்- கூகுள்

#world_news #Covid Vaccine
கொரோனா தடுப்பூசி ஏற்க மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்- கூகுள்

கூகுள் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை ஏற்க மறுக்கும் தமது பணியாளர்கள் இறுதியில் தமது தொழிலை இழக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ளது.

செய்தி நிறுவனம் ஒன்றிற்கு  கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அவ்வாறு வழங்காதவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஊழியர்கள் தங்களது அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யுமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த முயற்சி மீண்டும் மீண்டும் தாமதமாகி வருகிறது. இப்படி அலுவலகத்துக்குத் திரும்புவோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூகுள் எதிர்பார்க்கிறது.

இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தை, அமெரிக்க செய்தி சேனலில் வெளியான அந்த செய்தியின் துல்லியத்தை கூகுள் மறுக்கவில்லை.

"முன்பே கூறியது போல், எங்கள் பணியாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், சேவைகளை இயங்க வைக்கவும் தடுப்பூசிக் கொள்கை மிக முக்கியமான ஒன்று" என கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

"தடுப்பூசியைப் பெற தகுதியான ஊழியர்களுக்கு உதவவும், எங்கள் தடுப்பூசி கொள்கையில் உறுதியாக நிற்கவும் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்." என்றார் அவர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை கூகுளுக்கு அனுப்பவோ அல்லது மருத்துவ அல்லது மத அடிப்படையில் விலக்கு பெறவோ டிசம்பர் 3 வரை ஊழியர்களுக்கு அவகாசம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.