கனடாவில் கோர விபத்து- யாழ்ப்பாணப் பெண் உயிரிழப்பு!

#Jaffna #Women #Death
Nila
4 years ago
கனடாவில் கோர விபத்து- யாழ்ப்பாணப் பெண் உயிரிழப்பு!

கனடா, மிசிசாகாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

56 வயதான தமிழ் பெண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.

வீடு ஒன்றிலிருந்து வெளியேறிய கார், குறித்த பெண் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செவ்வாயக்கிழமை காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் நடந்து சென்றுக்கு கொண்டிருந்த பெண்ணே விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தை ஏற்படுத்தியவர் அவ்விடத்தில் இருந்து தப்பி செல்லாமல் பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவருகின்றது.

வாகனத்திற்கு அடியில் இருந்த பெண்ணை வெளியே எடுத்து தீவிர சிகிச்சையளித்து காப்பாற்ற முயற்சித்த போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4