கோவிட் தடுப்பூசியால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு சிகிச்சை பெறச் சென்ற மக்கள்: இடையூறு விளைவித்த அதிகாரிகள்

#Covid Vaccine
Prathees
2 years ago
கோவிட் தடுப்பூசியால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு சிகிச்சை பெறச் சென்ற மக்கள்: இடையூறு விளைவித்த அதிகாரிகள்

கோவிட் தடுப்பூசியைப் பெற்ற பிறகு ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு சிகிச்சை அளிக்க கிரந்துருகோட்டையில் உள்ள உள்ளூர் மற்றும் ஆயுர்வேத  வைத்திய நிலையமொன்று மேற்கத்திய வைத்தியர்களால் இடையூறு செய்யப்பட்டுள்ளது.

கிரந்துருகோட்டே அகல ஓயா ஆலய வளாகத்தில் கோவிட் இறப்பு தடுப்பு சங்கத்தால் இந்த கிளினிக் அமைக்கப்பட்டது.

அகல ஓயா விகாரையின் பிரதம தேரர் தலைமையில் இந்த சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

  500 க்கும் மேற்பட்ட மக்கள் கோவிட்  தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட  சிக்கல்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும்இ காலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வைத்திய அதிகாரி இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக கோவிட் இறப்பு தடுப்பு பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.

இவ்வாறான கிளினிக்குகள் நடத்தப்படுவதனால் தடுப்பூசி போடுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு இடையூறு ஏற்படும் என மாவட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாரம்பரிய வைத்தியர் தரங்க பொரவகமகே,  

அரசின் திட்டத்திற்கு நாங்கள் தடையில்லை என்றும், தடுப்பூசி போட்டு சிக்கலுக்கு ஆளான பலர் இப்பகுதிக்கு வருவதாகவும் கூறினார்.

ஒரு மருத்துவராக, அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது அவர்களின் மருத்துவப் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது இரு குழுக்களுக்கிடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றதுடன், தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் தமக்கு பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்கள் தெரிவித்திருந்தனர்.

மருத்துவ மனைக்கு வந்த மக்கள் மாவட்ட வைத்திய அதிகாரியிடம் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய கோவிட் இறப்பு தடுப்புக் கூட்டணியின் சுதேச மற்றும் பாரம்பரிய மருத்துவக் குழுவினர், 

பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை எந்த மேற்கத்திய மருத்துவராலும் சட்டப்பூர்வமாகத் தடுக்க முடியாது என்றும் இது தொடர்பில் மாவட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  மேலும் தெரிவித்தனர்.