IMF போனால் உடனே அரசை விட்டு விலகுவேன்: வாசுதேவ

Prathees
2 years ago
IMF போனால் உடனே அரசை விட்டு விலகுவேன்: வாசுதேவ

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று கடனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் ஒரு கணம் கூட அரசாங்கத்தில் இருக்கப் போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிதியத்திடம் கடன் வாங்குவது என்பது ஏழு தலைமுறையாக  பாதிக்கும் வேலை என்றும் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பது ஒரு நாடு நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டால், எந்த நாடும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் அதற்கான கடைசி வழி. அப்போது நடக்கும் அனைத்தும் நிதியத்தின் கொள்கையின்படி நடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து அரச சொத்துக்களையும் தனியார்மயமாக்குதல், நாட்டில் நலன்புரி குறைப்பு, ரூபாய் மிதப்பது போன்ற பல தீவிர நிலைமைகளை முன்மொழிகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.