சுவைமிக்க வாணியம்பாடி பிரியாணி சமைத்துப்பாருங்கள்....

#Cooking
சுவைமிக்க வாணியம்பாடி பிரியாணி சமைத்துப்பாருங்கள்....

தேவையான பொருட்கள் :

  • சிக்கன் – 300 கிராம்
  • பாஸ்மதி அரிசி – 2 கப்
  • வெங்காயம் – 1 பெரியது
  • புதினா, கொத்தமல்லி – 1 கை அளவு நறுக்கியது
  • உப்பு – தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது அரைக்க :
  • இஞ்சி – 1 துண்டு
  • பூண்டு – 5 - 6 பல் (தோல் நீக்கியது)
  • பட்டை – 1 சிறிய துண்டு
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 1
  • சோம்பு – 1 தே.கரண்டி
  • பச்சைமிளகாய் - 2 சிக்கனுடன் சேர்த்து

ஊற வைக்க :

  • அரைத்த இஞ்சி பூண்டு விழுது
  • மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
  • தயிர் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :

  • எண்ணெய் , நெய் - சிறிதளவு
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை 

செய்முறை :

  1. வெங்காயத்தினை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  2. இஞ்சி பூண்டு விழுதிற்கு தேவையான பொருட்கள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த விழுது + சிக்கனில் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து சிக்கனுடன் கலந்து கொண்டு குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  4. அரிசியினை தண்ணீரில் போட்டி 15 – 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பிறகு, அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  6. வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், ஊற வைத்துள்ள சிக்கன் கலவையினை இத்துடன் சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.
  7. 2 - 3 நிமிடங்கள் கழித்து புதினா + கொத்த மல்லியினை சேர்த்து கிளறி, தட்டு போட்டு மூடி வேக விடவும்.
  8. இத்துடன் 4 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  9. கொதி வந்தவுடன் ஊற வைத்துள்ள அரிசியினை சேர்த்து சிறிய தீயில் வைத்து தட்டு போட்டு மூடி வேக விடவும்.
  10. பிரியாணி நன்றாக வெந்தவுடன், கடைசியில் எலுமிச்சை சாறினை பிழிந்து கிளறி விடவும் . சுவையாக எளிதில் செய்ய கூடிய பிரியாணி ரெடி. 

கவனிக்க :

இதில் தக்காளியினை சேர்க்க தேவை யில்லை. தண்ணீருக்கு பதிலாக சிக்கன் ஸ்டாக் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!