ஏப்ரல் மாத புத்தாண்டு நிவாரணம் வழங்க பாரிய திட்டத்தை தயாரித்துள்ள பசில்

#Basil Rajapaksa
Prathees
4 years ago
ஏப்ரல் மாத புத்தாண்டு நிவாரணம் வழங்க பாரிய திட்டத்தை தயாரித்துள்ள பசில்

ஏப்ரல் மாத புத்தாண்டுக்குள் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க முடியும் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அதற்குள் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடுமையாக குறையும் என்றும் அவர் கூறினார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இதற்கான பாரிய திட்டத்தை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும், அதற்கான முடிவுகள் ஏப்ரலில் கிடைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, பொருளாதார நிபுணர்கள் என்ன சொன்னாலும் எதிர்காலத்தில் மக்களுக்கு பெருமளவு நிவாரணம் கிடைக்கும் என்றார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4