ஃபிட்ச் எச்சரிக்கை குறித்து பொருளாதார வல்லுநரின் கருத்து

#SriLanka
Prathees
2 years ago
ஃபிட்ச் எச்சரிக்கை குறித்து பொருளாதார வல்லுநரின் கருத்து

இந்த நேரத்தில், இலங்கை ஃபிட்ச் தரமதிப்பீடுகளில் கவனம் செலுத்துவதும் எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் அவசியம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃபிட்ச் தரமதிப்பீடு குறைவினால் இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் பதிலளிக்கும்போதே கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் அண்மைக் காலமாக பொதுத் தரக் குறைப்பைக் கண்டித்து பத்திரிகைச் செய்திகளை வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.

இந்த முடிவுகள் மத்திய வங்கி மற்றும் பிற நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், அந்த கடன் மதிப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் மதிப்பீடுகளின் பரந்த பார்வையுடன் நெருக்கடியைத் தீர்க்க ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி இன்று (18) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் கடன் மதிப்பீட்டைக் குறைப்பதற்கான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இன் அவசர முடிவானது, கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து இலங்கையில் இடம்பெற்று வரும் சாதகமான முன்னேற்றங்களை அங்கீகரிக்கத் தவறியதாக அந்த அறிக்கையில் தெதிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஃபிட்ச் ரேட்டிங்ஸ் போன்ற தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையை தரமிறக்கச் செய்த வேகத்தை நம்ப முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தின் சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் வரவிருக்கும் அந்நிய செலாவணி வரவுகள் குறித்து இலங்கை அதிகாரிகள் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் மதிப்பீடுகள் தொடர்பில் தொடர்ந்தும் எச்சரித்து வருவதால், அத்தகைய நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என மத்திய வங்கி வலியுறுத்துகிறது

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட் தொற்றுநோய் காரணமாக உயர் அழுத்த சூழலில் கூட  கடனையும் திருப்பி செலுத்துவதில் இலங்கை தாமதம் செய்யவில்லை என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.