முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சிறையில் உயிரிழப்பு

Prasu
4 years ago
  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சிறையில் உயிரிழப்பு

ஹுங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போயா தினத்தன்று மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரேமதிலக்க அமரவீர ஹுங்கம பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், ஹுங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் சிறையினுள் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

பின்னர் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சந்தேக நபரின் மரணத்தையடுத்து அவரது உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் ரன்ன பகுதியில் வீதியை மறித்து போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4