அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியதும் நேரடியாக பிரதமர் பதவியை ஏற்கும் பசில்

Prabha Praneetha
4 years ago
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியதும் நேரடியாக பிரதமர் பதவியை ஏற்கும் பசில்

அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் நேரடியாக பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரபலங்கள் இருவரிடம் குறித்த ஊடகம் வினவிய போது அவர்கள் இதனை நிராகரித்துள்ளனர்.

எனினும் சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த நாட்களாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த மே மாதம் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவராக வெளிநாடு சென்ற பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து மீண்டும் நிதியமைச்சராக பதவியேற்றார்.

எப்படியிருப்பினும் தற்போது பி.பி. ஜயசுந்தரவை பாதுகாக்க பசில் முன்வந்துள்ளமையினால் ஜனாதிபதி உட்பட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பலர் அவரை மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4