இலங்கையில் மேலும் 695 பேருக்கு கொரோனா உறுதி

#Covid 19
Prabha Praneetha
4 years ago
இலங்கையில் மேலும் 695 பேருக்கு கொரோனா உறுதி

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 695 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 79 ஆயிரத்து 134ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 47 ஆயிரத்து 182 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 17 ஆயிரத்து 218 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4