பைஸர் - அஸ்ட்ராசெனெகா செலுத்திக்கொண்டோர் ஒமிக்ரொனிடமிருந்து பாதுகாப்பு பெறமுடியுமா?

#SriLanka
Nila
2 years ago
பைஸர் - அஸ்ட்ராசெனெகா செலுத்திக்கொண்டோர் ஒமிக்ரொனிடமிருந்து பாதுகாப்பு பெறமுடியுமா?

பைஸர் மற்றும் அஸ்ட்ராசெனெகா ஆகிய 2  தடுப்பூசிகளும் ஒமைக்ரொன் கொவிட் திரிபுக்கு எதிராக குறைவான செயல்திறனை கொண்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் திரிபான ஒமைக்ரொன் உலகை அச்சுறுத்து வருகிறது.

90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் திரிபானது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்குகிறது.

இதனால் தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி இந்த புதிய வைரஸுக்கு எதிராக செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் பைஸர் மற்றும் அஸ்ட்ராசெனெகா ஆகிய 2 தடுப்பூசிகளும் ஒமைக்ரொன் திரிபுக்கு எதிராக குறைவான செயல்திறனை கொண்டிருக்கின்றமை ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பைஸர் அல்லது அஸ்ட்ராசெனெகா ஆகியவற்றின்2  தடுப்பூசிகளை ஏற்றியபிறகு, டெல்டாவுடன் ஒப்பிடும்போது, ஒமைக்ரொனுக்கு எதிராக அவற்றின் செயல்திறன் குறிப்பிடத் தக்க அளவில் குறைவதை இங்கிலாந்தின் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும் பைஸர் தடுப்பூசியின் செயலூக்கிதடுப்பூசியை செலுத்தி கொண்ட 2  வாரங்களுக்குப் பிறகு அதிக செயல்திறன் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.