லிஃப்ட் விபத்தில் இளம் பெண் பலி

#Death
Prathees
4 years ago
லிஃப்ட்  விபத்தில் இளம் பெண் பலி

கண்டி மாவட்டத்தில் பிலிமத்தலாவவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் மின்தூக்கி  உடைந்து விழுந்ததில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறுஉயிரிழந்தவர் தெஹித்த பலன  பிரதேசத்தில் வசிக்கும் பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் பேராதனை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பொலித்தீன் பைகள் மற்றும் அரிசிப் பைகள் தயாரிக்கும் குறித்த தொழிற்சாலை மூன்று மாடிகளைக் கொண்டது என  பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்றாவது மாடியில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்த போது பொருட்களை ஏற்றிச் சென்ற லிஃப்ட் கீழே விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4