பொலிஸாரின் விசேட நடவடிக்கை: 147 நபர்கள் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
பொலிஸாரின் விசேட நடவடிக்கை: 147 நபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 147 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் போதைப்பொருள், சட்டவிரோத மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் வைத்திருந்ததற்காக சந்தேக நபர்கள், பிடிவிறாந்து மற்றும் தேடப்படும் நபர்கள் உள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் வீதித் தடைகள் மற்றும் நடமாடும் ரோந்துப் பணிகளைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போதுஇ ​​11,162 வாகனங்களும்இ 15,685 நபர்களும் சோதனை செய்யப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4