எதிர்வரும் தேர்தலில் மக்கள் முன் வருவேன்:  துமிந்த சில்வா

#Colombo
Prathees
4 years ago
எதிர்வரும் தேர்தலில் மக்கள் முன் வருவேன்:  துமிந்த சில்வா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தற்போதைய தலைவருமான துமிந்த சில்வா அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாம் எங்கு சென்றாலும் கட்சியை விட்டு விலகப் போவதில்லை எனவும் பசில் ராஜபக்ச மிகுந்த முயற்சியுடன்  பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது கட்சியை கட்டியெழுப்புவதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பை நாம் அனைவரும் அறிவோம்.

யார் எங்கு சென்றாலும் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் போகவில்லை.

நான் எப்படி வேலை செய்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் பணிபுரியும் போது கட்சி பாகுபாடு காட்டுவதில்லை.

கடந்த அரசாங்கம் ராஜபக்சக்களை பழிவாங்கியது முதலில் என்னை பழிவாங்கியது.

மீண்டும் ஒன்றும் சொல்வதற்கில்லை. வரும் தேர்தலில் உங்களிடம் வருவேன்.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து நாம் மீள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4