மூன்று மாத குழந்தையை விற்று போதைப் பொருள் வாங்கிய தம்பதியினர்

Prathees
4 years ago
மூன்று மாத குழந்தையை விற்று போதைப் பொருள் வாங்கிய தம்பதியினர்

மூன்று மாத குழந்தையை விற்று அந்த பணத்தை போதைப்பொருள் வாங்க பயன்படுத்திய தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் சிசுவை 700,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த  சிசுவை அப்பகுதியில் உள்ள வேறு ஒரு தம்பதிக்கு  சட்டத்தரணி ஊடாக  கடிதம் மூலம் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிசுவை விற்பனை செய்து கிடைத்த பணத்தில்  30000 ரூபா பெறுமதியான போதைப்பொருளை கொள்வனவு செய்து மீதி பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4