வெளிநாடு செல்லத் தயாரான பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்: மூவரை வாழவைத்த உடல் உறுப்புக்கள் 

#Death
Prathees
2 years ago
வெளிநாடு செல்லத் தயாரான பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்: மூவரை வாழவைத்த உடல் உறுப்புக்கள் 

பாரிய விபத்தில் படுகாயமடைந்து மூளைச் சாவடைந்த 44 வயதுடைய பெண்ணின் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களும் கல்லீரலும் குருநாகல், கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் மூன்று நோயாளர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு வேலைக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த அந்தப் பெண், புறப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் பெரும் விபத்துக்குள்ளானார்.

குருநாகலில் விடுதியொன்றில் தங்கயிருந்தபோது உணவுப்பார்சலை வாங்கி வர குருநாகல் நகருக்குச் சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்களாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவரது மூளை சாவடைந்து விட்டதால்,  அவரது உடலின் பாகங்கள் மூன்று நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

பேருவளை கரடகொட (கல்பொத்த) பகுதியைச் சேர்ந்த 44 வயதான வை.ஜி. கல்யாணி சேனாரத்ன இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகள் 17 வயதுடைய தருஷி ஹிமாஷா மற்றும் 14 வயதுடைய கவிஷா தனஞ்சய ஆகிய இரு பிள்ளைகளின் சம்மதத்துடன் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 3 பேரும் தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.