ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு வேகத்தில் பரவும் - ஆய்வில் தகவல்

#Omicron
Prasu
4 years ago
ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு வேகத்தில் பரவும் - ஆய்வில் தகவல்

டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் இலங்கை உட்பட உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இங்கிலாந்தில் 4,120 பேரும், தென் ஆப்பிரிக்காவில் 1,000 பேரும், அமெரிக்காவில் 321 பேரும், டென்மார்க்கில் 273 பேரும், சுவிட்சர்லாந்தில் 128 பேரும், பெல்ஜியத்தில் 124 பேரும், அவுஸ்திட்ரேலியாவில் 103 பேரும், ஜெர்மனியில் 102 பேரும், இஸ்ரேலில் 90 பேரும், இந்தியாவில் 87 பேரும் மற்றும் 80 நாடுகளில் 604 பேரும் ஒமிக்ரோன் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்டா வகை கொரோனா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் டெல்டாவை விட மிகவும் குறைவான உடல் பாதிப்பையே ஒமிக்ரோன் ஏற்படுத்துவதாக அந்த ஆய்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. ஆனாலும் அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமிக்ரோன் வைரஸ் டெல்டாவை விட மிக குறைவான அளவில் நுரையீரல்களை தாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4