கோவிட் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு எச்சரிக்கை

#Covid 19
Prathees
2 years ago
கோவிட் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு எச்சரிக்கை

தான்சானியாவில் அண்மையில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை வந்துள்ள பௌத்த தூதுக்குழுவினரை கூடிய விரைவில் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு துறவி மற்றும் மற்றொரு நபருக்கு ஏற்கனவே கோவிட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அண்மையில் நடைபெற்ற புத்தமத மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 மதகுருமார்கள் மற்றும் பாமரர்கள் கலந்துகொண்டனர்.

நாடு திரும்பியதும், நாட்டில் நடத்தப்பட்ட  பரிசோதனையில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

நேற்று நாடு  திரும்பிய பின்னர், குழுவினர் தங்கள் வீடுகளுக்கு திரும்பியதுடன், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த துறவி மற்றும் சாததாரண நபர் ஒருவரும் விரைவான ஆன்டிஜென் சோதனைக்கு முன்வந்தனர்.

அவர்கள் இருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.