யாழில் உண்ணிக் காய்ச்சலால் மூதாட்டி மரணம்!

Prasu
4 years ago
யாழில் உண்ணிக் காய்ச்சலால் மூதாட்டி மரணம்!

யாழ்ப்பாணத்தில் உண்ணிக் காய்ச்சல் காரணமாக மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று நாள்களின் பின் இன்று மரணித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது - 63) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

எனினும், சிகிச்சை பயனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4