இலங்கைக்கு கிடைக்க இருக்கும் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எப்போ கிடைக்கும்?

Prasu
2 years ago
இலங்கைக்கு கிடைக்க இருக்கும் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எப்போ கிடைக்கும்?

அன்னிய செலவாணியால் இலங்கையில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்த இவ்வேளையில் வேறு வெளி நாடுகளின் ஊடாக இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக  கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது, இந்த வார இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் எனவும்,

நிதி கிடைக்கப் பெறும் விதம் தொடர்பில் தற்போது கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டிற்கு நிதி கிடைக்கப் பெற்றவுடன், நிதி கிடைத்த விதத்தை வெளிப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.