எண்ணெய் இல்லாமல் மீண்டும் மூடப்படவுள்ள சபுகஸ்கந்த

Nila
2 years ago
எண்ணெய் இல்லாமல் மீண்டும் மூடப்படவுள்ள சபுகஸ்கந்த

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பிரச்சனையால் ஆர்டர் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அடுத்த கச்சா எண்ணெய் சரக்கு ஜனவரி 25ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

அதன்படி, ஜனவரி முதல் வாரத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 420 மில்லியன் டொலர்களை திரட்ட முடியாத நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இந்தத் தொகையை வழங்குமாறு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூபாயை சம்பாதிக்க முடியும் ஆனால் டொலர்களை சம்பாதிக்க முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்

இந்நிலைமையால் எரிபொருள் இறக்குமதி பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.