இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் மற்றுமொரு கப்பல்..!

Prabha Praneetha
4 years ago
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் மற்றுமொரு கப்பல்..!

இந்தியாவில் இருந்து நானோ திரவ உரங்களை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு வரவுள்ளதாக உர செயலகம் தெரிவித்துள்ளது.

கொமர்ஷல் உர நிறுவனம் மூலம் உரத்தை இறக்குமதி செய்யுமாறு பணிப்பாளர் சந்தன ஹேவகே கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி 500,000 லீற்றர் நானோ திரவ உரம் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுமார தெரிவித்துள்ளார்.

இதன் கீழ் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு நானோ திரவ உரம் ஒரு மில்லியன் போத்தல்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4