அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்தால் மக்கள் பாதிப்பு

Prabha Praneetha
4 years ago
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்தால் மக்கள் பாதிப்பு

நாட்டின் 5 மாவட்டங்களில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும் சில வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நுவரெலியா, ஹட்டன் டிக்கோயா, பொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை, லிந்துலை, டயகம, அக்கரப்பத்தனனை, உடபுஸ்ஸலாவ போன்ற வைத்தியசாலையிலும் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4