பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி மஹரகமவில் பாவனையில்!

Mayoorikka
4 years ago
பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி மஹரகமவில் பாவனையில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகின்றார்.

மஹரகமவைச் சேர்ந்த கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றார்  என்று தெரியவருகின்றது.

1942 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜீப், இரண்டாம் உலக போரின் போது உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது. இந்த ஜீப் வண்டி இந்தியாவில் இருந்து பருத்தித்துறைக்கு கொண்டுவரப்பட்டதாகும்.

2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் அந்த ஜீப் வண்டி, கராஜில் இருந்துள்ளது. அந்த வாகனத்தின் மூன்றாவது உரிமையாளரே, சகல ஆவணங்களை காண்பித்து, ஜீப் வண்டியை பெற்று, அதனை மஹரகமவில் உள்ள கராஜில் வைத்து திருத்தியுள்ளார்.

இந்த வாகனத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவருடைய நெருங்கிய பாதுகாவலர்கள், மூத்த தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4