எரிவாயு அடுப்பு வெடிப்பு: வீடுகளில் இப்படியும் நடக்கிறது

#Litro Gas
Mayoorikka
4 years ago
எரிவாயு அடுப்பு வெடிப்பு: வீடுகளில் இப்படியும் நடக்கிறது

புதிதாக வாங்கிய காஸ் சிலின்டர் வெடிக்க கூடாதென கடவுளுக்கு நேந்து  துணியில் காசுகட்டி அதனை சிலிண்டரில் கட்டி சமையலில் ஈடுபட்டு வருகின்ற சம்பவமொன்று   மட்டக்களப்பு ஆரையம்பதியில்   இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் முற்றுகையிட்டு,  சோதனையின் போது கசிப்புடன் பெண்ணொருவரை கைது செய்தனர்

இதேவேளை, குறித்த வீட்டின் சமையலறையில் சோதனையின்போது அங்கிருந்த எரிவாயு சிலிண்டரில், மஞ்சல் துணியொன்றில் காசு கட்டப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

  இது தொடர்பாக பொலிஸார் விசாரித்தபோது எரிவாயு சிலிண்டர் அடுப்பு வெடித்துவிடக் கூடாதென கடவுளுக்கு நேந்து காசு கட்டியுள்ளதாக அப்பெண் விளக்கமளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4