அமெரிக்க டொலர்களை வழங்க சீனா இணக்கம்!

#China
Mayoorikka
4 years ago
அமெரிக்க டொலர்களை வழங்க சீனா இணக்கம்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன அரசாங்கம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிடம் இருந்து கடன் பெற முயற்சித்து வருவதாகவும் ஆனால் அது வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) அண்மையில் இலங்கையின் கடன் மதிப்பீட்டை CC மட்டத்தில் இருந்து CCC மட்டத்திற்கு குறைத்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4