மக்கள் பட்டினியால் வாட வேண்டிய பேரவலம்! இம்முறை புத்தாண்டு வாழ்த்துக் கூறமுடியாது!-காவிந்த ஜயவர்தன

Prabha Praneetha
4 years ago
மக்கள் பட்டினியால் வாட வேண்டிய பேரவலம்! இம்முறை புத்தாண்டு வாழ்த்துக் கூறமுடியாது!-காவிந்த ஜயவர்தன

"2022 ஆம் ஆண்டு மலரும்போது 'இனிய புத்தாண்டாக அமையட்டும்’ என இம்முறை வாழ்த்துக் கூற முடியாத நிலைமை ஏற்படும்."

- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"2022 ஆம் ஆண்டு மலரும்போது, இனித புத்தாண்டாக அமையட்டும் என இம்முறை வாழ்த்துக்கூட கூறமுடியாத நிலைமை ஏற்படும்.

ஏனெனில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வறுமை நிலையும் உருவாகும். பட்டினியால் வாட வேண்டிய நிலை ஏற்படும்.

நாட்டு மக்களைப் பட்டினியில் வாடவைத்த அரசு என இந்த அரசு வரலாற்றில் இடம்பிடிக்கும்" - என்றார்.
..........

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4