எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: சற்றுமுன்னர் அறிக்கை சமர்ப்பித்த குழு

#Laugfs gas #Litro Gas
Mayoorikka
4 years ago
எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: சற்றுமுன்னர் அறிக்கை சமர்ப்பித்த குழு

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சற்று முன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் விசாரணைகள் கடந்த 11ஆம் திகதி நிறைவடைந்ததாகவும் அதன் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையே இவ்வாறு சமரப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வர்த்தக மற்றும் விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர் தீ, வெடிப்புகள் மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்க நவம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதியினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மேலும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ப்ரோப்பேன் அளவு 30 சதவீதமாகவும், பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட, சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று(20) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4