தேய்காய் திருடிய நபரை  நிர்வாணமாக்கி  தண்டனை

#Protest
Prathees
4 years ago
தேய்காய் திருடிய நபரை  நிர்வாணமாக்கி  தண்டனை

பசியை போக்க தோட்டத்தில் தேங்காயை பறித்த நபரை நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நாத்தாண்டிய - ஹெவன பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 இந்த சம்பவத்தைக் கண்டித்து பிரதேச மக்கள் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டதாக பிரதேசத் தகவல்கள் தெரிவித்தார்.

நாத்தாண்டிய - ஹெவன பிரதேசத்தில் உள்ள ஒரு அமைப்புக்கு சொந்தமான காணியில் உள்ள தென்னந்தோப்புக்குள் நுழைந்து தேங்காய் ஒ;றை எடுத்து  சென்ற போதே குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த தென்னந்தோப்பு அதிகாரிகள் குழுவொன்று இவரை தாக்கி இருபுறமும் கைகளை கட்டி மரத்தில் கட்டி வைத்து அப்பகுதியில் நடமாட வற்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரி குறித்த நபரின் தாய், உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4