பிரபல பாடகி யொஹானிக்கு காணி வழங்க அமைச்சரவை அனுமதி!

#Colombo
Mayoorikka
4 years ago
பிரபல பாடகி யொஹானிக்கு காணி வழங்க அமைச்சரவை அனுமதி!

இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவுக்கு காணி ஒன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பத்தரமுல்லை ரொபட் குணவர்தன மாவத்தையில் அவருக்காக 9.68 பேர்சஸ் காணியை பரிசாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் இன்றைய அமைச்சரவையில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்  ‘மெனிக்கே மகே ஹித்தே’ என்ற பாடல் மூலம் இவர் பிரபல்யமானது குறிப்பிடத்தக்கது. 
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4